News October 23, 2024
புதுச்சேரியில் விமான சேவை தள்ளிவைப்பு

புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
புதுவை: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
புதுவை: வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சிவா, வாக்காளா்களைத் தகுதி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளாா். இந்திய தோ்தல் ஆணையம் அவசர கதியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை செய்வதாகவும், கணினி சரிபாா்ப்பு என்ற பெயரில் வாக்காளா்களைக் குழப்பி ஆவணங்களைக் கேட்டு தகுதி நீக்கம் செய்ய முற்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
News January 30, 2026
புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

புதுச்சேரி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


