News February 5, 2025
புதுச்சேரியில் வாகன எண்கள் ஏலம்

புதுகை போக்குவரத்துத்துறை நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில், புதுவை போக்குவரத்துத் துறையின் PY-02 ஒய் (காரைக்கால்) வரிசையில் உள்ள எண்கள், போக்குவரத்து இணையதளத்தில் வரும் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் தேவையான பெயர், கடவுச் சொல்லை அதே இணையதளத்தில் பிப்.05 முதல் 10ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
புதுச்சேரி: மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்!

காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையில் வரும் வெள்ளிக்கிழமை (12.9.2025) அன்று புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளார்கள். காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
News September 9, 2025
புதுவையில் எம்.எல்.ஏ நேரு முற்றுகை போராட்டம்

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை காமராஜர் வீதி, புது தெரு, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை அருந்தி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
News September 9, 2025
புதுவை: போதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மீனவர் மதி, மனைவி ஜெயப்பிரதா(40)
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்
சம்பவத்தன்று அதிக மது போதையில் மனைவிடம் ஏற்பட்ட தகராறில் நிதானமிழந்து கத்தியால் ஜெயப்பிரதாவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வரிச்சிக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.