News December 25, 2025

புதுச்சேரியில் மேலும் தடை நீட்டிப்பு

image

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட ரோடமைன் பி நிறமி கலந்த பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு மேலும் ஒரு ஆண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட உத்தரவில், இத்தடை 2026 டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 29, 2025

புதுச்சேரிக்கு விரைவில் புதிய முக்கிய திட்டங்கள்

image

புதுச்சேரி மாநிலத்திற்காக பல மகத்தானதிட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். அடுத்த முறை பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகை புரியும் போது, அந்த திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் பல முக்கிய திட்டங்கள் வெளிப்படும் என்றும் உறுதியளித்தார்.

News December 29, 2025

புதுச்சேரி: 12th போதும் அரசு வேலை ரெடி!

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 29, 2025

புதுவை: துணை குடியரசு தலைவர் புகழாரம்

image

புதுச்சேரியில், இன்று (29.12.2025) புதுவை வந்துள்ள துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியது, புதுவை ஒரு தொன்மையான நாகரீகம் மட்டுமின்றி அன்பு அரவணைப்பு போன்ற நிரந்தர மாண்புகளை உலகிற்கு பறைசாற்றும் நகரமாகவும் புதுவை திகழ்வதாக கூறினார். நிகழ்வின் போது புதுவை முதல்வர், உள்துறை அமைச்சர், ஆளுநர் என பலரும் உடனிருந்தனர். துணை குடியரசுத் தலைவருக்கு மரியாதை சே செய்யப்பட்டது.

error: Content is protected !!