News October 31, 2025
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!

புதுவையில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70-ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 இருந்து ரூ.4; 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 இருந்து ரூ.6; 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 இருந்து ரூ.7.50-ஆக உயர்த்தப்பட்டு, அக்.1 முதல் பயன்படுத்தப்பட்ட மின் பயன்பாடு கட்டணத்தில், உயர்த்தப்பட்ட கட்டணம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
தேசிய ஒற்றுமை தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நம் தேசத்தின் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் அவரின் மகத்தான தியாத்தையும் உறுதியான தலைமைத்துவத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் ஒற்றுமை தான் நம் வலிமை ஒற்றுமை தான் நம் அடையாளம் என்று அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
புதுவை: இது தெரிஞ்சா சிரமப்பட வேண்டாம்!

புதுவை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
புதுச்சேரியில் கால்நடை துறை அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி அரசின் இணை செயலாளர் பத்மநாபன் சுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், “கால்நடை அபிவிருத்தி பிரிவு இணை இயக்குநர் செந்தில்குமார் கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாக துணை பதிவாளராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோழி அபிவிருந்தி பிரிவு இணை இயக்குநர் குமாரவேல், கால்நடை உற்பத்தி பிரிவு இணை இயக்குநராகவும், இடமாற்றம் செய்யப்பட்டார்.” என தெரிவிக்கப்பட்டுய்ள்ளது.


