News October 1, 2024
புதுச்சேரியில் மின்சார ரயில் சேவை 2 நாட்கள் ரத்து

தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மின்சார ரயிலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் மின்சார ரயிலும் வரும் 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
Similar News
News September 14, 2025
புதுவை: எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா பொட்டலங்கள்!

தெலுங்கான மாநிலம் கச்சிகுடாவில் இருந்து புதுவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில், போலீசார் ரெயில் பெட்டிகளை சோதனை செய்த போது சாக்கு பை ஒன்று கிடந்தது. போலீசார் அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News September 14, 2025
புதுவை: கூடுதல் விலையில் மது விற்ற கடைகளுக்கு அபராதம்

புதுவை கலால்துறை துணை ஆணையரும், எடையளவு துறை கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேத்யூ பிரான்சிஸ் தலைமையில், அதிகாரிகள் புதுவை நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுவையில் உள்ள 10 மதுக்கடைகளில் கூடு தல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாண்லே பால் அதிக விலைக்கு விற்ற 2 மளிகை கடைகளுக்கு ரு.2500 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 14, 2025
புதுவை மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுவை மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <