News March 24, 2025

புதுச்சேரியில் மார்ச் 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 26ஆம் தேதி புதுச்சேரி வேலைவாய்ப்பகம் வளாகத்தில் நடக்க உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் & புதுவையைச் சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேல் பணியிடங்களை நிரப்ப உள்ளன. SSLC, HSC, ITI, DIPLOMA, ANY Degree என அனைவரும் பங்கு பெறலாம். பிறர் பயன் பெற SHARE செய்யவும்..

Similar News

News March 27, 2025

புதுவையில் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் தெரியுமா?

image

புதுவை மதகடிப்பட்டில் குண்டாங்குழி எனும் குளக்கரையில் அமைந்ததுள்ளதால் இங்குள்ள மூலவர் குண்டாங்குழி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி. 985-இலிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. SHARE செய்யவும்

News March 27, 2025

புதுவை ஆரோவில்லில் ஐஐடி கேம்பஸ்

image

புதுவை ஆரோவில்லில் ஐஐடி மெட்ராஸ் தனது 4வது கேம்பஸை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாக அதன் இயக்குநர் காமக்கோடி அறிவித்துள்ளார். ஆரோவில்லில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பூஜ்ஜிய-உமிழ்வு சோதனை மையம் அமைக்கப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

News March 27, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தீர்மானம் நிறைவேற்றம்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக தியாகராஜன், நேரு(எ)குப்புசாமி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானம் அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் இன்று 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!