News January 3, 2026
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் கைது

புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர், வாலிபால் மைதானம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 1,460 கிராம் கஞ்சா வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் டில்லியைச் சேர்ந்த லக் ஷ்யவிஜ் என்பதும், அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயின்று வருவதும் தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.
Similar News
News February 4, 2026
புதுச்சேரி: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 4, 2026
புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 4, 2026
புதுச்சேரி: வாலிபர் அடித்துக் கொலை!

புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் பகுதியில், நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார், வாலிபரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


