News April 8, 2025

புதுச்சேரியில் மதுக்கடைகள் இயங்காது

image

புதுச்சேரி கலால்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி சாராயம் கள் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும் இயங்க கூடாது என கலால் துறை ஆணையர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 17, 2025

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

புதுச்சேரிக்கு உட்பட்ட மணவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டி பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (ஏப்.17) காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுமென்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 17, 2025

புதுவை: அதிகாரிகள் லேப்-டாப், ஐபோன் வாங்க அனுமதி

image

புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுக்கான் இன்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம், இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி லேப்டாப், ஐபோன் சாதனக்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தனர்.

News April 16, 2025

புதுவை: மே.30 கடைசி நாள்

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!