News September 9, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்க ரோடியர் மில் ரயில்வே கேட் நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது. இதனால் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் முதல் ஆலை வீதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும். SHARE IT
Similar News
News September 9, 2025
புதுச்சேரி: மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்!

காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையில் வரும் வெள்ளிக்கிழமை (12.9.2025) அன்று புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளார்கள். காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
News September 9, 2025
புதுவையில் எம்.எல்.ஏ நேரு முற்றுகை போராட்டம்

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை காமராஜர் வீதி, புது தெரு, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை அருந்தி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
News September 9, 2025
புதுவை: போதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மீனவர் மதி, மனைவி ஜெயப்பிரதா(40)
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்
சம்பவத்தன்று அதிக மது போதையில் மனைவிடம் ஏற்பட்ட தகராறில் நிதானமிழந்து கத்தியால் ஜெயப்பிரதாவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வரிச்சிக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.