News March 20, 2024

புதுச்சேரியில் பொறுப்பு கவர்னர் நியமனம்

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய கவர்னர் பொறுப்புக்களை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கவர்னர் நியமிக்கபடும் வரை அவர் இந்த பொறுப்புக்களை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வருகின்ற வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார். 

Similar News

News April 9, 2025

புதுச்சேரியில் நாளை போக்குவரத்து பாதையில் மாற்றம்.

image

புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை வியாழக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்புரமணிய சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை நடக்கிறது. அதனால் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை புதுவை போக்குவரத்து காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

காரைக்கால் அம்மையார் கோயில் பற்றி தெரியுமா?

image

காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தான் இந்த அம்மையார் கோயில். 63 நாயன்மார்களில் ஒருவர் தான் இந்த அம்மையார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவபெருமான் இவரை அம்மையே என்று அழைத்ததால், இவர் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்பட்டார். ஆனி மாதத்தில் மாம்பழம் இறைக்கும் திருவிழா நடைபெறும். திருமணமான பெண்கள் இங்கு வழிபட்டால் அவர்களது திருமண வாழ்வு சிறந்து விளங்கும் என கூறப்படுகிறது. SHARE செய்யவும்

News April 9, 2025

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

image

புதுவை அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார், நேற்று அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 53 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தி, 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

error: Content is protected !!