News January 3, 2025

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையானது அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News January 5, 2025

புதுவையில் மூட்டை, மூட்டையாக போதை பாக்குகள் பறிமுதல்

image

புதுவை ரெட்டியார் பாளையம் பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்யப்பட்டது. கடைகளுக்கு போதை பாக்குகளை விற்பனை செய்வது யார் என போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடைகளுக்கு போதை பாக்கு விற்க வந்தவரை பிடித்தனர். அதன் விசாரணையில் லாஸ்பேட்டை சாமி பிள்ளைதோட்டத்தை சேர்ந்த சிவக்குமாரை இன்று கைது செய்து போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.

News January 5, 2025

அதிமுக செயலாளர் முன்னாள் முதல்வர் மீது குற்றச்சாட்டு

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக நாராயணசாமி ஆண்ட ஆட்சி டெல்லி சுல்தான்களின் அடிமை ஆட்சி போல், அதில் தானும் அடிமையாக ஆட்சி புரிந்ததை மறந்துவிட்டு விரக்தியின் விளிம்பில் தற்போதைய ஆட்சியை, மத்திய அரசின் கைக்கூலி ஆட்சி என தன்னிலை உணராமல் விமர்சித்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

News January 5, 2025

மாநில அறிவியல் கண்காட்சி நாளை துவக்கம்

image

புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நாளை ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்க உள்ளது. இதில் புதுச்சேரி மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட 55 படைப்புகளுடன், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் இருந்தும் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில் குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.