News April 7, 2025
புதுச்சேரியில் பிரபல குற்றவாளி அதிரடி கைது

கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார். இவர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்காலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து இட செல்லாமல் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஓதியஞ்சாலை போலீசார் ஸ்டிக்கர் மணியை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 10, 2025
புதுச்சேரி டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் எச்சரிக்கை

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று (ஏ.09) இரவு செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். இதை பிறருக்கும் SHARE செய்யுங்க
News April 10, 2025
புதுச்சேரியில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

புதுச்சேரி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிகள் 2 பேர் மாயமாகியது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர். இதற்கிடையே சிறுமிகள் வீட்டிற்கு வந்ததையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக புஷ்பராஜ், மணி என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 9, 2025
புதுச்சேரியில் நாளை போக்குவரத்து பாதையில் மாற்றம்.

புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளை வியாழக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்புரமணிய சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை நடக்கிறது. அதனால் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை புதுவை போக்குவரத்து காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.