News March 17, 2026
புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் தங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றாலும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 30, 2026
விஜய்க்கு எதிராக போட்டியிடும் திலகபாமா.. யார் இவர்?

விஜய் களமிறங்கும் பெரம்பூரில் PMK பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. 2021-ல் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அவரால் 30 ஆயிரம் வாக்குகளை கூட பெறமுடியாமல் டெபாசிட் இழந்தார். இந்த சூழலில் பரிச்சயம் இல்லாத பெரம்பூரில் திலகபாமாவை களமிறக்கி உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
2 கிராம் தங்கம்.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜா, பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்குறுதியை அறிவித்துள்ளார். மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், திமுக வேட்பாளரைவிட பாகம் அளவில் 100 வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம், 300 வாக்குகள் அதிகம் பெறுபவர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக் என ஜாக்பாட் ஆஃபரை வெளிப்படையாக கூறியுள்ளார். இது SM-ல் விவாதமாக மாறியுள்ளது.
News March 30, 2026
BREAKING: எதிராக திரும்பிய தீவிர விசுவாசி.. EPS அதிர்ச்சி

நாமக்கல் தொகுதியில் EPS அறிவித்த வேட்பாளருக்கு எதிராக KPP பாஸ்கர் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார். EPS-ன் தீவிர விசுவாசியான EX MLA பாஸ்கரின் இந்த முடிவு EPS தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக பாஸ்கரின் ஆதரவாளர்கள் நாமக்கல் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு பாஸ்கர் வெற்றி வாய்ப்பை இழந்தார். <<-se>>#TNElection2026<<>>


