News October 16, 2024
புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

அரியாங்குப்பதில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய வளாகத்தில் புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 17 தேதி நாளை காலை 10 முதல் 1 வரை நடைபெற உள்ளது. இதில் கல்விச்சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ், சுய விவரம் மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
Similar News
News September 14, 2025
புதுவை: டிரைவர்களுக்கு போக்குவரத்து எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார்- ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது, ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார்.
News September 14, 2025
புதுவையில் ஆசிரியர் தற்கொலை; போலீசார் விசாரணை

புதுவை மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால், விரக்தியடைந்த அவர் விசம் குடித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 14, 2025
புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <