News April 16, 2024
புதுச்சேரியில் நாளை யோகா வகுப்பு

புதுவை: முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் யோகா வகுப்பு நாளை 17-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432-77486, 94432-75040 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News July 7, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கிக் கணக்கில் வரும் பணத்திற்கு கமிஷன் தருவதாக யாராவது கேட்டால், அதனை நம்பி வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுடைய பெயரிலான வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவதால், மோசடியில் உங்களுக்கும் தொடர்பு உடையதாக கருதப்படும் என எச்சரிக்கை. SHARE IT
News July 7, 2025
பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோயிலில் திருட்டு

புதுவை பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோவில் அதிகாரி இளங்கோவன் வழக்கம்போல் இன்று (ஜூலை 6) காலை கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முதலியார்பேட்டை போலீசில் புகார்
அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி கேமிராவை
பார்த்தனர். அதில் 2 மர்மநபர்கள் உண்டியல் உடைந்து பணத்தை திருடி செல்வது தெரிந்தது. இதுகுறித்து 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
News July 6, 2025
புதுச்சேரி: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
▶️பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
▶️அவசர ஊர்தி (Ambulance)-102, 108
▶️தீயணைப்பு-101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை-100
▶️குழந்தைகள் பாதுகாப்பு-1098
▶️பெண்கள் உதவி-1091
▶️சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.