News March 19, 2024
புதுச்சேரியில் நாளை மின்தடை

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 03 மணி வரை ஹரி நமோ நகர் பிரியதர்ஷினி நகர். ராஜா அண்ணாமலை நகர். காமராஜ் நகர். இஸ்ரவேல் நகர். குரு நகர். ராஜீவ் நகர். சிவாஜி நகர். இந்திரா நகர். நாவர்குலம் . அசோக் நகர். போன்ற இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
புதுவை: அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகளை விரைந்து முடித்திட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதுவை உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
News October 24, 2025
புதுவை: மாணவனை கொன்ற பெண்ணிற்கு ஆயுள்

காரைக்காலில் 8-ம் வகுப்பு மாணவன் பாலமணிகண்டன் என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு பள்ளி நிகழ்ச்சியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற வழக்கில், சகாய ராணி விக்டோரியா என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை காரைக்கால் மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
News October 24, 2025
புதுச்சேரி: நாளை மின்தடை அறிவிப்பு

புதவை தேத்தாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக நாளை (அக்.24) காலை 10 மணி முதல் 1 மணி வரை திருக்கனூர், கொண்டாரெட்டிபாளையம், கொடத்தூர், கைகோலபட்டு, மணலிபட்டு, செட்டிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என புதுவை மின்துறை அறிவித்துள்ளது.


