News December 2, 2024
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக, வீடூர் அணை திறப்பால் கிராமப்புற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை (டிச.3) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News September 12, 2025
டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 12, 2025
புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.