News January 30, 2026
புதுச்சேரியில் தொடங்கிய மலர் கண்காட்சி

புதுச்சேரி வேளாண்மை தரை சார்பில் 35ம் ஆண்டு மலர், காய், கனி கண்காட்சி இன்று மாலை துவங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இந்தாண்டு கண்காட்சியில் புதிய ரகமாக இம் பேஷன், கைலாடியா, பையர்பால் ஆகியவை உள்பட 25 வகை மலர் செடிவகைகளில், 40,000 மலர்செடிகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக மலர் கண்காட்சியில் ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.
Similar News
News January 31, 2026
புதுச்சேரி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
புதுவை: காவலர் பணிக்கு தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

புதுவை காவல்துறையில், காலியாக உள்ள 148 காவலர் பணியிடங்களை நிரப்ப நடந்த உடல் தகுதியில் தேர்வானோருக்கு பிப் 8-ந் தேதி 5 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான நுழைவுசீட்டை அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு காலை 10 முதல் மாலை 5 வரை 0413-2233338 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
News January 31, 2026
புதுவையில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளை முட உத்தரவு

புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார்
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 1-2-26 (ஞாயிற்றுக்கிழமை) புதுவை நகராட்சி பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படக்கூடாது. இதையும் மீறி செயல்படும் இறைச்சி
கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


