News February 25, 2026
புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Similar News
News February 28, 2026
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை!

பிரதமர் மோடி நாளை (மார்ச் 1) காலை 11:40 மணிக்கு தனி விமானம் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை, ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம், லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்திற்கு வருகை தந்து, அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் 12:40 மணிக்கு புறப்படுகிறார்.

புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் ரத்து

புதுச்சேரி காவல்துறை சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் மன்ற நிகழ்ச்சியான பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வர உள்ளதை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீனியர் எஸ்.பி கலைவாணன் நேற்று தெரிவித்தார்.