News December 26, 2025
புதுச்சேரியில் கேரளா மாணவர் கைது!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது அவை உண்மையற்றவை என்பது உறுதியானதாகத் தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி போலீசார், அந்த மாணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
புதுவை: கையில் வெட்டு-கூலித்தொழிலாளி படுகாயம்

லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ராஜசேகரன் (52). இவர் சம்பவத்தன்று பிச்சை வீரன்பேட்டில் ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பலகையை எந்திரம் மூலம் வெட்டியபோது, எதிர்பாராத விதமாக அவரது வலது கையில் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 27, 2025
புதுவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

புதுவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவனங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி உதவுங்க…


