News August 23, 2024
புதுச்சேரியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை தனகோடி நகர், சாரணப்பேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி வரும் 27-ந் தேதி காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை தனகோடிநகர், தர்மபுரி, லெனின்வீதி, சபரி நகர், புரட்சித்தலைவர் நகர், சாரணப்பேட்டை சுற்று பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்றார்.
Similar News
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025
காரைக்காலில் கார்னிவல் விழா குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கார்னிவல்- 2026 நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர். மேலும் கார்னிவல் விழா ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் மலர் கண்காட்சி ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.