News October 27, 2025
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி பேருந்துகள், 15 ஏ.சி. இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவை, இன்று மறைமலை அடிகள் சாலையில் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Similar News
News October 27, 2025
புதுச்சேரி: தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு நேர்காணல்

கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியின் மார்பக புற்று நோயியல் துறை சார்பில், திட்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 11 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 6 பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக உள்ளனர். அவர்களின் விவரம் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாளை மறுநாள் (29.10.2025) புதன்கிழமை ஜிப்மர் வளாகத்தில் நேர்காணல் நடக்கிறது.
News October 27, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் 28ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் இன்று இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
News October 27, 2025
மத்திய அமைச்சவுடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு

புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை, நேற்று (அக்.26) புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் இல்லத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.


