News August 6, 2024

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுவை பல்கலைக்கழக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவ தேர்வுக்கான இணையதளப் பதிவுகள் வரும் ஆகஸ்ட்.12 வரை நடைபெறும். மறுநாள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாணவர்களை ஹால் டிக்கெட்டை இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதையடுத்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

புதுச்சேரியில் உதவித்தொகை உயர்வு

image

புதுச்சேரியில், மாதாந்திர முதியோர் உதவித்தொகையை, ரூ.500 உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தற்போதைய ரூ.2,500 இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் விதவை மகள் திருமண நிதியுதவி தொகை ரூ.30,000-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தி முதல்வர் அரசனை வெளியிட்டுள்ளார்.

News January 22, 2026

புதுவை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!