News December 9, 2024
புதுச்சேரியில் உயிரிழந்த குழந்தையின் கண்கள் தானம்

லாஸ்பேட்டை தொகுதி ஆனந்தா நகரைச் சேர்ந்த மகாலட்சுமியின் சிறப்பு குழந்தை உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமையில் குழந்தையின் கருவிழி தானமாக பெறப்பட்டது. இதுவரை தானத்தின் மூலம் நான்கு பேர் கண் பார்வை பெற்றனர். மேலும் 5 நபர்கள் இறப்புக்கு பிறகு கண்களை தானமாக குடும்பத்தினர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 12, 2025
டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 12, 2025
புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
அடாக் அடிப்படையில் 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

புதுச்சேரியை சேர்ந்த 3 பிசிஎஸ் அதிகாரிகளுக்கு என்ட்ரி கிரேடில் அடாக் அடிப்படையில் பதவி அளித்து, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிசி எஸ் அதிகாரிகள் அர்ஜூன் ராமகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநராகவும், முரளிதரன் சுற்றுலா துறை இயக்குநராகவும், மோகன்குமார் மாகே மண்டல நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி சார்பு செயலர் ஜெய் சங்கர் பிறப்பித்துள்ளார்.