News January 23, 2026

புதுச்சேரியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

image

புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை நிலையத்திலிருந்து செல்லும் முத்தியால்பேட்டை மின் பாதையில் சில பரமரிப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஜன.23) காலை 09:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், செந்தாமரை நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லூர்து நகர், கென்னடி கார்டன் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

புதுவை: காவலர் பணிக்கு தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

புதுவை காவல்துறையில், காலியாக உள்ள 148 காவலர் பணியிடங்களை நிரப்ப நடந்த உடல் தகுதியில் தேர்வானோருக்கு பிப் 8-ந் தேதி 5 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான நுழைவுசீட்டை அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு காலை 10 முதல் மாலை 5 வரை 0413-2233338 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

News January 31, 2026

புதுவையில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளை முட உத்தரவு

image

புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார்
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 1-2-26 (ஞாயிற்றுக்கிழமை) புதுவை நகராட்சி பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படக்கூடாது. இதையும் மீறி செயல்படும் இறைச்சி
கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

News January 31, 2026

புதுச்சேரி: மது கடைகளை மூட உத்தரவு

image

வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 1) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று கலால்துறை அறிவித்துள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் பகுதியில் நாளை இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படக்கூடாது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!