News October 31, 2025

புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

image

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 175 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மீதமுள்ள பணியிடங்களை மட்டும் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தியால்பேட்டை திட்ட அலுவலகம் எதிரில் நேற்று கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News

News October 31, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.எஸ்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள். உங்களுடைய சிம்கார்டு ஆதார்கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் AWALA பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும், அந்த பணம் தீவீரவாத செயலுக்கு பயன்படுத்த பட்டுள்ளது என்றும் மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம்.” என கூறியுள்ளார்.

News October 31, 2025

புதுச்சேரி: மூன்று நாட்களில் 64 பேர் கைது

image

புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள மதுபானக்கடைகளையே நாடுகின்றனர். மது அருந்தி விட்டு அவர்கள் ரகளையில் ஈடுபடுகின்றனர். கடந்த மூன்று நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் 64 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

தேசிய ஒற்றுமை தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நம் தேசத்தின் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் அவரின் மகத்தான தியாத்தையும் உறுதியான தலைமைத்துவத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் ஒற்றுமை தான் நம் வலிமை ஒற்றுமை தான் நம் அடையாளம் என்று அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!