News August 17, 2025

புதுச்சேரியின் காந்தி யார் தெரியுமா?

image

புதுச்சேரியின் ‘பிரெஞ்சிந்திய காந்தி காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்தான் இவர், திருநள்ளாறு அடுத்த இளையான்குடியில் அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர். புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய இவர் பல நாளிதழ்களை எழுதியுள்ளார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 17, 2025

புதுச்சேரி: பார்வையற்றோருக்கான சதுரங்கப் போட்டி

image

புதுச்சேரி பார்வையற்றோர் பாதுகாப்புக் களஞ்சியம் சார்பில் பார்வையற்றோருக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு நடைபெற்றது. விழாவில் முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து கலந்து கொண்டு பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

News August 17, 2025

புதுவை: மக்களே உஷாரா இருங்க! எச்சரித்த எஸ்.பி!

image

புதுவையில் மொபைல் ஆப் மூலம் உடனடி கடன் & குறைந்த வட்டியில் லோன் தருவதாக ஆன்லைனில் பல்வேறு விளம்பரங்கள் வருகின்றன. அதை நம்பி பொதுமக்கள் கடன் பெற்ற பிறகு, அவர்களுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுகின்றனர். இதனால், பலரும் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால், ஆன்லைனில் உலா வரும் உடனடி கடன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி எச்சரித்துள்ளார். SHARE

News August 17, 2025

புதுச்சேரியில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள்

image

சுற்றுலா பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

error: Content is protected !!