News March 27, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக தியாகராஜன், நேரு(எ)குப்புசாமி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானம் அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் இன்று 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Similar News
News March 30, 2025
புதுவை முதலமைச்சரின் ரமலான் வாழ்த்து செய்தி

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ரமலானின் மறைபொருளானது, நோன்புடன் தீவிர பக்தியில் ஈடுபடுவதையும், மனத்தூய்மை, பொறுமை, சுய ஒழுக்கத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோன்பின் பிரார்த்தனைகள், உங்கள் வாழ்வில் அன்பு, சகோதரத்துவம், ஈகை, வலிமை மற்றும் வளமான வாழ்வைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் எனது அன்பான ரமலான் நல்வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்
News March 30, 2025
புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் ரம்ஜான் வாழ்த்து

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்ட செய்தியில், உலகில் வாழும் சரிபாதி மக்களின் விழாவான ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் புதுச்சேரி மாநில இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று கூறினார்.
News March 30, 2025
புதுவையில் காவலர்கள் திடீர் மாற்றம்

புதுவை காவல் தலைமையகத்தின் எஸ்.பி சுபம் கோஷ் வெளியிட்ட அறிவிப்பில், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும், வரதராஜன் போதை பொருட்கள் தடுப்பு பிரிவிற்கும், செந்தில்குமார் சிக்மா செக்யூரிட்டி, ஆடலரசன் ஏனாம் காவல் நிலையம், அனில்குமார் மாஹே காவல் நிலையம், சப் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல் ஒதியஞ்சாலை, பிரபு பாகூர் காவல் நிலையத்திற்கும் என இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.