News December 17, 2025
புதுச்சேரிக்கு மழை எச்சரிக்கை

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் வரும் டிச.20 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க…
Similar News
News December 18, 2025
புதுவை: LJK கட்சியில் இணைந்த பிக் பாஸ் நடிகர்

தவெக தலைவர் விஜயிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி LJK-வில் இன்று (டிச.18) இணைந்தார். புதுச்சேரியில், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, தன்னை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள் லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன் ஆகியோர் உடன் இணைந்தனர்.
News December 18, 2025
புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
புதுவை: ஆதிதிராவிடர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம்

புதுவை சட்டபேரவையில் இன்று (டிச.18) முதல்வர் ரெங்கசாமி தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுங்காடு – கோட்டுச்சேரி MLA சந்திர பிரியங்கா கலந்து கொண்டு, அவரது தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலவி வரும் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை எடுத்துரைத்தார். மேலும், இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.


