News November 27, 2025
புதுச்சேரிக்கு நாளை முதல் ஆரஞ்சு அலர்ட்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிக்கையின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை புயலாக மாறக்கூடும். இதனால் புதுச்சேரிக்கு மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். அவரை தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது பாஜக மாநில தலைவர் வி.பி ராமலிங்கம் உடன் இருந்தார்
News November 28, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், நாளை (நவ.29) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
புதுச்சேரி: சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மத்திய அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், செல்லிப்பட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். செல்லிப்பட்டு சாலை சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏ ஆதரவாளர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் உட்பட அனைவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.


