News April 26, 2025
புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News April 27, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 26, 2025
புதுகை: இளம்பெண் தற்கொலை மாமியார்,கணவன் இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாளன் கரையில் நேற்று (ஏப்.25) ஜெயஅற்புதம் என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜெய அற்புதம் தாயார் மாரிக்கண்ணு கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு துண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயா அற்புதம் மாமியார் வள்ளிக்கண்ணு மற்றும் அவரது கணவர் வீரமணி ஆகிய இருவரையும் திருமயம் காவல்துறையினர் கைது செய்தனர்.
News April 26, 2025
ராகு, கேது பெயர்ச்சி: போக வேண்டிய கோயில்

புதுகை மாவட்டம், பேரையூரில் உள்ள நாகநாதசாமி கோயிலில் நாகநாதசுவாமி, பிரகதாம்பாள் அருள்பாலிக்கின்றனர். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.