News June 14, 2024
புதுக்கோட்டை: வருமானவரி விழிப்புணர்வு கூட்டம்!

புதுக்கோட்டை வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் நேற்று வருமானவரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வருமானவரி அலுவலர்கள் பி.சதீஷ்குமார், ஆர்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு முன்கூட்டியே வருமானவரி செலுத்துவதன் அவசியம், சலுகைகள் குறித்தும், இணையவழியில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வது குறித்தும் விளக்கி கூறினர். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வருமானவரித் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 16, 2025
புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி எண்கள்!

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய காவல்துணை கண்காணிப்பாளர் எண்கள்.
▶️ புதுக்கோட்டை – 04322-222236
▶️ அறந்தாங்கி – 04371-220562
▶️ கீரனூர் – 04339-262241
▶️ பொன்னமராவதி – 04333-262160
▶️ ஆலங்குடி – 04322-251320
▶️ கோட்டைப்பட்டினம் – 04371-260350
▶️ இலுப்பூர் – 04339-472525 ஆகியவை ஆகும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 16, 2025
புதுக்கோட்டை கோயில்களில் சமபந்தி விருந்து

புதுக்கோட்டை, ஆக.15 – சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட இந்து சமய அறநிலைத் துறைக்குட்பட்ட கோயில்களில் சமபந்தி (பொது விருந்து) நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, கோயில் செயல் அலுவலர் ம. ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து உணவருந்தினர்.
News August 16, 2025
புதுக்கோட்டை: வங்கி வேலை! APPLY பண்ணுங்க

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் இந்த <