News January 27, 2026

புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து விராலிப்பட்டி அடுத்த கோமாபுரத்திற்கு நேற்று கருப்புசாமி (43) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடுகப்பட்டி சாலையில் அவருக்கு எதிரே டாரஸ் லாரியை ஒட்டி வந்த விஜய் (32) மோதியதில் கருப்புசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுபா அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

புதுக்கோட்டை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

புதுக்கோட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News February 4, 2026

புதுக்கோட்டை: மயங்கி விழுந்து தொழிலாளி பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக கருப்பையா (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணியில் இருக்கும்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் திருப்பதி அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

புதுகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!