News December 20, 2025

புதுக்கோட்டை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தச்சம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தச்சம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், தச்சம்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் (57) என்பவரிடம் வீட்டு வரி ரசீது கேட்டதற்கு ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Similar News

News December 22, 2025

புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 22, 2025

புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 22, 2025

புதுகை: வகுப்பறை கட்டடத்தை துவக்கி வைத்த முதல்வர்

image

கந்தர்வகோட்டை அடுத்த குளத்தூர் நாயக்கர் பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.21,50,000 லட்சம் மதிப்பீட்டில் இன்று (டிச.22) புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.மா. சின்னதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.

error: Content is protected !!