News April 18, 2025
புதுக்கோட்டை – ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
Similar News
News December 2, 2025
புதுகை: பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது

அறந்தாங்கியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொ) மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: விவசாயி எடுத்த விபரீத முடிவு

ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தை சேர்ந்த களப்பையா (49). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி GHக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: பைக் மோதி முதியவர் பரிதாப பலி

ஆலங்குடி அடுத்த கலிபுல்லா நகரை சேர்ந்தவர் கணேசன் (75). இவர் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி ஐயப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மோதியதில், படுகாயமடைந்த அவர் புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


