News September 19, 2025

புதுக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலத்தைச் சேர்ந்த அஞ்சலை (55) என்பவர் நேற்று இரவு மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் உடல்கூறு ஆய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 – 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் எச்.பி.வி தடுப்பூசியினை வழங்கும் முன்னோடி திட்டமானது கடந்த பிப்.28ம் தேதி முதல் துவங்கப்பட்டது. இந்த எச்.பி.வி தடுப்பூசி அனைத்து மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

News March 6, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!