News April 5, 2024
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடுசெய்ய ஏப்ரல் 13ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

புதுக்கோட்டை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை பதிவு செய்து பெற முடியும். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE NOW
News August 14, 2025
புதுக்கோட்டையில் நாளை நடைபெறும் முகாம்

புதுகை மாவட்டத்தில் நாளை (ஆக.15) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்; புதுகை மாநகராட்சி 16வது வார்டு பகுதி மக்களுக்கு மாவட்ட வர்த்தகர் கழகம் சில்வர் ஹாலிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்களுக்கு வேங்கிடகுளம் சமுதாய கூடத்திலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு கட்டுமாவடி பி.எம்.எஸ் திருமண மண்டபத்திலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு முல்லை திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.