News January 23, 2026
புதுக்கோட்டை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

புதுக்கோட்டை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு க்ளிக் செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT
Similar News
News January 28, 2026
புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
புதுகை: நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் பலி

இலுப்பூரிலிருந்து ராப்பூசலுக்கு நேற்று பைக்கில் சுப்பிரமணி (28) செல்லக்கண்ணு (60) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது ராப்பூசல் அரசு ஆரம்பப்பள்ளி எதிரே உள்ள சாலையில் அவர்களுக்கு எதிரே டிராக்டரை ஒட்டி வந்த நீலகண்டன் (20) மோதியதில் சுப்பிரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
புதுக்கோட்டை: இன்று மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.28) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக ஆதனகோட்டை, கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை, மங்கலக்கோயில், குன்னாண்டார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!


