News May 20, 2024
புதுக்கோட்டை மழைப்பதிவு விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமயம் பகுதியில் 8 செ.மீட்டரும், பொன் அமராவதி, கரம்பக்குடி, அன்னவாசல், பெருங்களூர், வம்பன் ஆகிய பகுதிகளில் 2செ.மீட்டரும் மழைப்பதிவாகியிருந்தது.
Similar News
News November 1, 2025
புதுக்கோட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 1, 2025
புதுக்கோட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
புதுக்கோட்டை: இயந்திரத்தில் சிக்கி விவசாயி பரிதாப பலி

விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடியைச் சேர்ந்தவர் ராசப்பன் (50) விவசாயி. இவர் இன்று காலை (நவ.1) தனது வயலில் பவர் டில்லர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பவர் டில்லர் கையில் இருந்து நழுவி அவரது நெஞ்சில் வேகமாக மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


