News December 11, 2025

புதுக்கோட்டை: மணல் கடத்தல்-வாகனங்கள் பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பொன்கொடியில் சரக்கு வாகனம் மூலம் ரவிக்குமார் (28) என்பவர் நேற்று மணல் கடத்தியுள்ளார். அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 யூனிட் மணலுடன் இரண்டு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News

News December 14, 2025

புதுகை: 3428 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுகை மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நேற்று 12 அமர்வுகள் நடந்தன. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தேசிய மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி க.பூரண ஜெயஆனந்த் வரவேற்றார். இதில் கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 3428 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

News December 14, 2025

புதுகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

புதுகை: சூதாடிய மூவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூர் ஆற்றுப் பாலம் அருகே ஸ்ரீதரன் (27), ராமன் (45), சங்கிலி முத்து (44) ஆகிய மூவரும் நேற்று சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ. 1370யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

error: Content is protected !!