News September 22, 2025

புதுக்கோட்டை மக்களே உஷார்; வெளுக்க போகும் மழை

image

புதுக்கோட்டை மக்களே இன்று (செப்.22) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது வருகிறது. மேலும், இன்று இரவு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!

Similar News

News September 23, 2025

புதுக்கோட்டை மக்களே நாளைய தினம் மறக்காதீங்க!

image

புதுக்கோட்டை மக்களே நாளை 24.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டலைன் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.கீரமங்கலம்
மாரியம்மன் கோவில் தி-மண்டபம்
2.கந்தர்வகோட்டை
பெரியக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம்,
3.திருமயம்
சின்னியம்மத்தாள் தி-மண்டபம், கோனாப்பட்டு
4.குன்றாண்டார் கோவில்
ஐ.எம். தி-மண்டபம், திருமலைராயபுரம்
5.கறம்பக்குடி
மீனாட்சி தி-மண்டபம், செம்பட்டி விடுதி
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 23, 2025

அவசர தேவைக்கு ரத்தம் கொடுத்த கொடையாளர்

image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகனசுந்தரம் என்பவரின் அவசர சிகிச்சைக்காக, O பாசிட்டிவ் இரத்தம் செப்டம்பர் 22 அவசரமாக தேவைப்பட்ட நிலையில், குருதிக்கூட்டின் அமைப்பிற்கு தொடர்பு கொண்ட மருத்துவர்கள் உடனடியாக வருகை தந்த மஜிமா குறித்த நேரத்தில் O+ குருதிக்கொடை அளித்து பேருதவி புரிந்துள்ளார். இதனால் மருத்துவர்கள் ரத்தம் அளித்தவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

News September 23, 2025

புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்   

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!