News January 5, 2026
புதுக்கோட்டை: தவறி விழுந்து துடிதுடித்து பலி!

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு நேற்று வீரையா என்பவர் ஓட்டி சென்ற பைக்கில் பின்னால் அமர்ந்து சுப்பிரமணியன் (38) சென்றுள்ளார். அப்போது அன்னவாசல் பேயல் குளத்தினருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்து சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டி மீனா (30) அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த அன்னவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
புதுக்கோட்டை: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நேற்று அருண் சக்சேனா (33) என்பவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் அருண் சச்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த வெள்ளனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 6, 2026
புதுக்கோட்டை: பூட்டி கிடந்த வீட்டில் துணிகரம்

புதுகை டிவிஎஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் வன்னிதயால் (44). இவர் நேற்று முன்தினம் திருப்பதி சென்றுள்ளார். அவரது வீட்டில பணிபுரியும் அஞ்சலி தேவி நேற்று அவரது வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்து 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புதுகை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 6, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.


