News September 12, 2025

புதுக்கோட்டை: சொந்தவீடு கட்ட போறீங்களா??

image

புதுக்கோட்டை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இனி ஆயிரம் கணக்கில் பணம் செலவு பண்ண தேவையே இல்ல! உங்கள் பகுதினருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 12, 2025

மாஜி திமுக எம்பி வீரையா நினைவு அனுசரிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி க வீரையா நினைவு தினம் இன்று செப்டம்பர் 12 அனுஷ்டிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மாவட்ட திமுக பொருளாளர் லியாகத் அலி அவைத்தலைவர் வீரமணி முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

News September 12, 2025

திமுக செயலாளர் செல்ல பாண்டியன் அஞ்சலி!

image

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தந்தை வேதமூர்த்தி (80) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் இன்று அஞ்சலி செலுத்தினார். மேலும் திமுக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

News September 12, 2025

புதுக்கோட்டை: அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் ரெய்டு!

image

புதுக்கோட்டை மாவட்ட குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வீட்டில் சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவான நிலையில் இன்று (செப் 12)காலை திடீரென சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!