News September 30, 2024
புதுக்கோட்டை சிறையில் இலங்கை மன்னர் ‘காலச்சுவடு’
கண்டியை (இலங்கை) ஆண்ட கடைசி மன்னர் விக்ரம ராஜசிம்ஹோ 1816 இல் ஆங்கிலேயரால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மன்னரும் அவரது குடும்பத்தினரும் புதுக்கோட்டை சிறைக்கு கைதியாக அனுப்பப்பட்டனர். அவர்களது பரம்பரையின் பூலாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். மன்னரின் பரம்பரையினருக்கு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 19, 2024
தண்டலை ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரினை, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 19, 2024
அறந்தாங்கி : புதிய பள்ளி கட்டிடம் ஆய்வு செய்த அமைச்சர்
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாளூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 206.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 7 வகுப்பறையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 19, 2024
கீரமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கீரமங்கலம் பேரூராட்சி மேலக்காடு முஸ்லிம் ஜமாத்தார்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் தனியாக தொழுகை நடத்துவதற்கு ஏதுவாக செட் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியக்குழு மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.