News September 29, 2025
புதுக்கோட்டை: சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது

திருமயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என கடந்த வருடம் அவரது பெற்றோர்கள் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த முரளி (20) என்பவர் கடத்தி சென்றது. இந்நிலையில் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
Similar News
News October 30, 2025
புதுக்கோட்டை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுகை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News October 30, 2025
புதுகை: மாணவிக்கு பிறந்த குழந்தை – வாலிபர்கள் கைது

விராலிமலை அருகே மதயானைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (25), வடக்கன்வயலை சேர்ந்த சிவசூரியா (20) ஆகியோர் சேர்ந்து 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இந்நிலையில் திடீரென 8-வது மாதத்திலேயே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் 2 வாலிபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News October 30, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று (அக்.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


