News March 29, 2024
புதுக்கோட்டை: கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்ப்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை நேற்று காலை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News November 17, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி, கொடிகுளம், ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 16, 2025
புதுகை: குரூப்-2 போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு!

புதுகை மாவட்டத்தில் குரூப்-2, 2ஏ போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு (நவ.18) நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான போட்டி தேர்வுக்கு 645 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்ந்து பயன்பெற 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், குரூப் 2, 2a தேர்வின் முதல் நிலை தேர்வு கூட நுழைவுச்சீட்டு உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நேரில் தொடர்பு கொள்ளும் மாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


