News September 1, 2025
புதுக்கோட்டை: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், புதுகை மாவட்ட மக்கள் ‘9486111912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 8, 2025
புதுகை மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

புதுகை மாவட்டத்தில் நாளை (செப்.,9) 8 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, புதுகை 28, 32-வது வார்டு மக்கள் மன்றத்திலும், திருவரங்குளம் 11 ஊராட்சிக்கு கீழாத்தூர் சமுதாய கூடம், அன்னவாசல் 7 ஊராட்சிக்கு கீழக்குறிச்சி சமுதாய கூடம், விராலிமலை 15 ஊராட்சிக்கு குமாரமங்கலம் கலையரங்கம், கறம்பக்குடி 6 ஊராட்சி முத்துலட்சுமி திருமண மண்டபம், திருமயம் ஊராட்சியில் நடைபெற உள்ளது. SHARE IT.
News September 8, 2025
புதுகை மாணவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்

சென்னையில் மண்டல அளவில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் எனது புதுக்கோட்டை மாணவி ஜீவா தங்கப்பதக்கம் வென்று முதலமைச்சர் கோப்பை மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாநில போட்டியில் வென்று பதக்கங்களைப் பெற அவருக்கும் அவரது பயிற்றுநர் அப்துல் காதருக்கும் சக மாணவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News September 8, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.7) கடந்த 24 மணி நேரத்தில் அறந்தாங்கி பகுதியில் 61.8 மி.மீ, ஆயிங்குடி பகுதியில் 62.4 மி.மீ, நாகுடி பகுதியில் 68 மி.மீ, ஆவுடையார் கோவிலில் 14.8 மி.மீ, மணமேல்குடி 67 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.