News October 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 17, 2025
புதுகை: பொது இடத்தில் மது அருந்திய நபர்!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பெட்ரோல் பங்க் அருகே சத்யராஜ் (37) என்பவர் நேற்று (அக்.16) மது அருந்திக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மழையூர் காவல்துறையினர் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அவரை கைது செய்து மேலும் அவர் மீது வழக்குப்பதிந்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.
News October 17, 2025
புதுகை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !
News October 17, 2025
புதுகை: திடீர் மாரடைப்பால் ஓட்டுநர் மரணம்

மதுரையில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு நேற்று (அக்.16) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை லெம்பலக்குடி டோல்கேட் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டார். பின்னர் ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக ஓட்டுனர் உயிரிழந்தார்.