News December 23, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 24, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் இதுவரை 25 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ரத்த கொதிப்பு, கண், காது, மூக்கு தொண்டை, அல்ட்ரா சவுண்ட், பெண்களுக்கு கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 36,409 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
புதுகை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் புதுகை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள இங்கே<
News December 24, 2025
புதுக்கோட்டை: முதியவர் மீது மோதி பைக்

கந்தர்வக்கோட்டை அடுத்த அரியாண்டிபட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு பழனிச்சாமி (67) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியாண்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரசுதன் (18) மோதியதில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


