News October 22, 2025

புதுக்கோட்டை: அவசர கால உதவி எண் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பு குறித்து மட்டுமல்லாது அவசர கால உதவிகளுக்கு 1077 அல்லது 04322-222207 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ளவர்கள் இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2026

புதுகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை.<> PM-JAY<<>> செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

புதுக்கோட்டை: கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அடுத்த கரகத்திக்கோட்டை மஞ்சக்குடி சாலையில் நேற்று இத்ரீஸ் கான் (28), இம்ரான் கான் (30), முகமது அப்துல்லா (28) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 13, 2026

புதுகை: 16-ம் தேதி கடைசி நாள்-கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு கணினி பிரிவு அல்லது 3 மாத கால கணினி பயிற்சி பெற்று ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்.16-க்குள் இணை இயக்குநர், தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பூ மாலை வணிக வளாகம், புதுகை-5 என்ற விலாசத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!